இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Dec 2025 10:16 AM IST
ரெயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே 'ரிசர்வேஷன் சார்ட்: பயணிகளுக்கு இனிப்பான செய்தி
சிரமங்களை தவிர்க்கும் விதமாக சராசரியாக 10 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் லிஸ்ட் வெளியிடும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
- 19 Dec 2025 10:15 AM IST
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில்.. பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கம் கொள்ளை
பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- 19 Dec 2025 10:01 AM IST
1439 சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை இல்லை - அன்புமணி குற்றச்சாட்டு
பல்லாயிரம் கோடி கனிமக் கொள்ளைக்கு துணை போன திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 19 Dec 2025 10:00 AM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 22-ம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 22-ம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- 19 Dec 2025 9:46 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்: மெக்ராத்தை முந்திய நாதன் லயன்
ஆஸ்திரேலிய அணியின் 38 வயது சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நேற்று ஆலி போப், பென் டக்கெட் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார் இதனால் அவரது விக்கெட் எண்ணிக்கை 564 ஆக (141 டெஸ்ட்) உயர்ந்தது.
- 19 Dec 2025 9:40 AM IST
சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 19 Dec 2025 9:38 AM IST
கடும் பனிமூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Dec 2025 9:25 AM IST
இளையோர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் இந்தியா- இலங்கை இன்று மோதல்
19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் அரையிறுதியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி அரையிறுதியிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்புள்ளது.
- 19 Dec 2025 9:20 AM IST
சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்
கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் சென்னை புறநகர் மின்சார ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
- 19 Dec 2025 9:06 AM IST
பாஜகவின் பி.டீம். தவெகவா? - நயினார் நாகேந்திரன் அளித்த பதில்
பாஜக சார்பில், தமிழ்நாடு முழுவதும், 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் மரத்தடி மாமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு விவசாயிகள், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
















