இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Sept 2025 1:41 PM IST
நீலகிரி, கோவை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை மாவட்டங்களில் வரும் 25, 27ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் வரும் 26ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 23 Sept 2025 1:31 PM IST
ஏஐ தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலையில் அதிக பாதிப்பு ஏற்படும்: ஐ.நா. ஆய்வில் தகவல்
உலக அளவில் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்கள் கூட அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அனைவரிடமுமே ஸ்மார்ட்போன் இருப்பதால் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மெல்ல மெல்ல மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஏஐ-யால் எந்த அளவு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு தீமையும் உள்ளது.
- 23 Sept 2025 1:30 PM IST
திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை: முக்கிய தேர்தல் பொறுப்புகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
- 23 Sept 2025 1:28 PM IST
திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை...மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த நடிகைக்கு இந்தி மற்றும் தெலுங்கில் அதிக ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பால் இளம் வயதிலேயே பிரபலமானார்.
- 23 Sept 2025 12:57 PM IST
இ-சிகரெட்பயன்பாடு: நடிகர் ரன்பீர் கபூருக்கு வந்த சிக்கல்
நெட்பிளிக்ஸ் ஷோவில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை பயன்படுத்தியதாக நடிகர் ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை போலீசாருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
- 23 Sept 2025 12:55 PM IST
‘சென்னை ஒன்று’ செயலிக்கு வரவேற்பு - 1 லட்சம் பேர் பதிவிறக்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (கும்டா) 2-வது ஆணைய கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகர பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த 'கியூ.ஆர்.' பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடல் செயலியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.
- 23 Sept 2025 12:43 PM IST
8 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி.யை குறைத்திருக்கலாம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
இந்தி திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 23 Sept 2025 12:41 PM IST
வைகை அணை நீர் திறப்பு நிறுத்தம் - நீர்வளத்துறை தகவல்
வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி வைகை பாசனக் கால்வாயில் குளிக்கச் சென்று மாயமான நபரை தேட வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அந்நபரை மீட்ட பிறகு தண்ணீர் மீண்டும் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Sept 2025 12:36 PM IST
தெலுங்கில் கால் பதிக்கும் ''சாட்டை'' பட நடிகை
தமிழில் சாட்டை படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகை மகிமா நம்பியார் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் நடிகர் ஸ்ரீ விஷ்ணுவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- 23 Sept 2025 12:18 PM IST
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
சதுரகிரியில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா இன்று (செவ்வாய் க்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
















