இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Sept 2025 12:12 PM IST
துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை
கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 23 Sept 2025 12:05 PM IST
இன்போசிஸ் தலைவர் சுதாமூர்த்தியிடம் நூதன முறையில் பணம் பறிக்க முயற்சி
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவரான சுதாமூர்த்தி பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சுதாமூர்த்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், தான் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் (டிராய்) ஊழியர் என்றும், உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காமல் உள்ளது.
எனவே உங்கள் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை தரும்படி கேட்டுள்ளார். மேலும் உங்கள் செல்போனில் இருந்து ஆபாச படங்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் மர்மநபர் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சுதாமூர்த்தி அந்த செல்போன் அழைப்பை துண்டித்தார்.
- 23 Sept 2025 12:04 PM IST
பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ்
ஐ.நா. அமைப்பு பாலஸ்தீன தனி நாடுக்கான முன்மொழிவை கொண்டு வந்தபோது, கனடா முதலில், இதற்கான ஆதரவை அறிவித்தது.
- 23 Sept 2025 12:03 PM IST
சாலை விபத்தில் மரணமடைந்த திமுக உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் குடும்ப நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
- 23 Sept 2025 12:01 PM IST
விரைவு பேருந்துகளில் பயணிகளுக்கு குடிநீர்: டெண்டர் கோரியது அரசு போக்குவரத்து கழகம்
1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணையவழி டெண்டர் கோரப்பட்டுள்ளது.
- 23 Sept 2025 11:41 AM IST
தமிழக சட்டசபை அக்டோபர் 14-ந் தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி மழைக்கால கூட்டத் தொடராக இது நடக்கிறது. இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்துள்ளார்.
- 23 Sept 2025 11:35 AM IST
கல்யாணி பிரியதர்ஷனின் சூப்பர் ஹீரோ படமான ''லோகா: சாபடர் 1 - சந்திரா'' மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. ரூ. 270 கோடி வசூலித்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த மலையாளப் படமாக மாறி இருக்கிறது.
இதற்கிடையில், லோகா வெளியாகி ஒரு நாளுக்குப் பிறகு, கல்யாணியின் மற்றொரு படமான ஓடும் குதிரை சாடும் குதிரை வெளியானது.
- 23 Sept 2025 11:07 AM IST
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 23 Sept 2025 11:03 AM IST
பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் தொடங்கியது
பாமக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 23 Sept 2025 10:59 AM IST
ஆத்திகர்கள், நாத்திகர்கள் கொண்டாடும் ஆட்சி திமுக - அமைச்சர் சேகர்பாபு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாத்திக டிராமாவாதி என அண்ணாமலை பேசிய கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்கையில், “ஆத்திகர்கள், நாத்திகர்கள் கொண்டாடும் ஆட்சி திமுக, பாஜகவால் ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை போன்றோர் பேசுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை” என்று தெரிவித்தார்.
















