இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Aug 2025 4:43 PM IST
இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விஜய்யின் செல்பி வீடியோ
கடந்த 21-ம் தேதி நடந்த இந்த மாநாட்டின்போது விஜய், ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்தார். அது ஒரு நாளுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது.
- 24 Aug 2025 4:09 PM IST
திவ்யா தத்தாவின் முதல் தெலுங்கு வெப் தொடர்...எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தேவா கட்டா இயக்கத்தில் அதிகம் பேசப்பட்ட அரசியல் வெப் தொடரான ''மாயசபா'' மூலம் திவ்யா தத்தா தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார்.
- 24 Aug 2025 3:36 PM IST
''அது என் சினிமா கெரியரின் மைல்கல்'' - ''வணங்கான்'' பட நடிகை
சுதீப்புடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் ரோஷ்னி பிரகாஷ் உற்சாகமடைந்துள்ளார்.
- 24 Aug 2025 2:58 PM IST
ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு... நிராகரித்த 33 வயது நடிகை - யார் தெரியுமா?
பெத்தி படத்தில் ராம் சரணின் அம்மாவாக நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாக இந்த நடிகை தெரிவித்தார்.
- 24 Aug 2025 2:26 PM IST
விஜய்யோடு ஒரே மேடையில் அஜித், ரஜினி, கமல், சூர்யா? - வெளியான பரபரப்பு தகவல்
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னணி நட்சத்திரங்களை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 24 Aug 2025 1:51 PM IST
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார்
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா வரும் உக்ரைன் அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்துவார் என்றும் அப்போது போர் நிலவரம், போரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபரின் இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ரஷியா மற்றும் உக்ரைனுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இரு நாட்டு தலைவர்களிடமும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 24 Aug 2025 1:49 PM IST
மார்ஷ், ஹெட், கிரீன் சதம்: ஆஸ்திரேலிய அணி 431 ரன்கள் குவிப்பு
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் இன்று நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதனால் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் திணறினர். இதில் சிறிது அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். அவர் 103 பந்தில் 142 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து கேமரூன் க்ரீன் களம் புகுந்தார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் சதம் அடித்த நிலையில் (100 ரன்) அவுட் ஆனார். தொடர்ந்து அலெக்ஸ் கேரி களம் இறங்கினார். கேரி -கிரீன் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் மளமளவென உயர்ந்த்து.
அதிரடியாக ஆடிய கேமரூன் கிரீன் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 431 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 432 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.
- 24 Aug 2025 1:09 PM IST
மைசூரு சான்டல் சோப் விளம்பரத்திற்கு நடிகை தமன்னா வாங்கியது இத்தனை கோடியா?
கர்நாடக சட்டசபையில் மைசூரு சான்டல் சோப்பை விளம்பரப்படுத்தவும், பிரசாரத்திற்காகவும் கடந்த 2 ஆண்டுகளில் அரசு எவ்வளவு செலவிட்டுள்ளது? என பா.ஜ.க. உறுப்பினர் சுனில்குமார் கேள்வி எழுப்பினார். இதுபற்றி அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
- 24 Aug 2025 1:08 PM IST
ஜன்னல் ஓட்டையில் சிக்கிய மாணவியின் ஒற்றை விரல் - மீட்க போராடிய தீயணைப்புத் துறையினர்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளி முடிந்து மாணவர்களை பள்ளி பேருந்து ஏற்றிச் சென்றது. அப்பொழுது ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தனது பேருந்து நிறுத்தம் வந்தபோது பேருந்தில் இருந்து இறங்குவதற்காக எழுந்த போது ஜன்னல் ஓரத்தில் இருந்த ஓட்டையில் விரல் சிக்கிக்கொண்டதை உணர்ந்தார்.
இது குறித்து பேருந்தின் டிரைவரிடம் தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் மாணவியின் விரலை எடுக்க முற்பட்டபோதும் ஓட்டையில் சிக்கி இருந்த விரல் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

















