இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Aug 2025 1:03 PM IST
கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்து: ரூ. 30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் 2 பேருக்கு வேலை வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- 24 Aug 2025 12:46 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: சென்னை வந்தார் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா' கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
2 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து எம்.பி.க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ‘இந்தியா' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டில் இருந்து தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் சென்னை வந்தடைந்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, துணை ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. எம்.பி.க்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சுதர்சன் ரெட்டி வேண்டுகோள் விடுக்க உள்ளார்.
- 24 Aug 2025 12:42 PM IST
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு
மதராஸி படத்தின் டிரெய்லர் அல்லது இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பினை இந்த வாரத்தில் படக்குழு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் அறிவித்திருந்தது. இந்த நிலையில், படக்குழு டிரெய்லர் வெளியீடு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணியளவில் மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
- 24 Aug 2025 12:08 PM IST
முதன்முறையாக சாதனை... ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு பரிசோதனை வெற்றி; ராஜ்நாத் சிங் பெருமிதம்
இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆனது. ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ். எனப்படும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு ஒன்றை ஒடிசாவில் பரிசோதனை செய்து உள்ளது.
- 24 Aug 2025 12:07 PM IST
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து டிரீம் லெவன் விலக திட்டம்..?
பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் டிரீம் லெவன் மற்றும் எம்.பி.எல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
- 24 Aug 2025 12:04 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புஜாரா ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு முடிவு தொடர்பாக புஜாரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு. தேசிய கீதம் பாடிக்கொண்டு. ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் வைக்கும்போது என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பது அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் அவர்கள் சொல்வது போல், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மிகுந்த நன்றியுடன் நான் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவரின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. என தெரிவித்துள்ளார் .
புஜாராவின் திடீர் ஓய்வு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.
- 24 Aug 2025 12:02 PM IST
தர்மஸ்தலா விவகாரம்: காங்கிரஸ் கட்சியின் சதிச்செயல்; பா.ஜ.க. கடுமையாக விமர்சனம்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று உடல்களை நேத்ராவதி ஆற்றங்கரை உள்பட பல்வேறு இடங்களில் புதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகார் தெரிவித்த நபருக்கு ஆதரவாக வக்கீல் மஞ்சுநாத் என்பவர் ஆஜராகி உள்ளார். மேலும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் புகார்தாரர், எஸ்.ஐ.டி. போலீசாரிடம் அடையாளம் காட்டிய இடங்களில் புதைக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை பற்றியும் தகவல்களை வெளியிட்டார்.
- 24 Aug 2025 11:32 AM IST
தி.மு.க. நாடாளுமன்ற பொதுக்குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிப்பு
தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
- 24 Aug 2025 11:08 AM IST
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஓஎன்ஜிசி ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கிறது. மாநில அரசு முடிவெடுக்காத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கீழ் வரும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 24 Aug 2025 10:59 AM IST
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதைத்தொடர்ந்து புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு போலீஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.


















