இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 April 2025 5:47 PM IST
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேர் பணியிடமாற்றம்
பொதுப்பணித்துறை செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்வளத்துறை செயலாளராக இருந்து வந்து மங்கத் ராம் சர்மா பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 25 April 2025 5:43 PM IST
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன்
சென்னையில் நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். இதன்படி செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 25 April 2025 5:41 PM IST
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது.
தேர்தலுக்கு தயார்படுத்துதல், பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்துதல் குறித்து அதிமுக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தபின் முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- 25 April 2025 5:40 PM IST
டெல்லி மேயர் தேர்தல் - பாஜக வேட்பாளர் வெற்றி
டெல்லி மேயர் தேர்தலில் பாஜவை சேர்ந்த ராஜா இக்பால் சிங் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமுள்ள 142 வாக்குகளில் 133 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
- 25 April 2025 5:39 PM IST
28ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு பேரவை கூட்டம்
ஜம்மு காஷ்மீரில் வருகிற 28-ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க இந்த சிறப்பு சட்டசபை கூட்டம் கூடுவதாக கூறப்படுகிறது.
- 25 April 2025 4:13 PM IST
என் நேர்மையை கேள்விக்குள்ளாக்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வருத்தம்
நீரஜ் சோப்ரா கூறுகையில், “எனது நாடும் அதன் நலன்களும் எப்போதும் எனக்கு முக்கியம். தங்கள் உறவுகளை இழந்து தவிப்பவர்களுடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. ஒட்டுமொத்த தேசத்தோடு சேர்ந்து, நடந்ததை நினைத்து நான் வேதனையும் கோபமும் அடைந்துள்ளேன். நமது நாட்டின் பதில் ஒரு தேசமாக நமது வலிமையைக் காண்பிக்கும் என்றும், நீதி நிலைநாட்டப்படும் என்றும் நான் நம்புகிறேன்.
நான் பல ஆண்டுகளாக என் நாட்டை பெருமையுடன் சுமந்து வருகிறேன், அதனால் எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. எந்த நல்ல காரணமும் இல்லாமல், என்னையும் என் குடும்பத்தையும் குறிவைப்பவர்களுக்கு நான் என்னை விளக்க வேண்டியிருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
- 25 April 2025 4:09 PM IST
"பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்" - அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்
அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 April 2025 4:07 PM IST
ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்ற 'வீர ராஜா வீரா பாடல் தொடர்பான காப்புரிமை விவகாரத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 25 April 2025 4:06 PM IST
"சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு தெரியாமல்.." - ராகுல் காந்தியை கண்டித்த சுப்ரீம்கோர்ட்டு
வீர் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம்கோர்ட்டில், நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் ராகுல் காந்திக்கு நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். அதில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு தெரியாமல் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது.
இதுபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற அவதூறு கருத்துக்களை வருங்காலத்தில் பேசினால் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
- 25 April 2025 4:02 PM IST
ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூருவின் மிகச்சிறந்த தேர்வு இவர்தான் - பயிற்சியாளர் கருத்து
ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூருவின் மிகச்சிறந்த தேர்வு குருனால் பாண்ட்யா தான் என அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் கூறியுள்ளார்.
















