இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Sept 2025 9:11 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? இலங்கையுடன் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்றில் இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது.
- 26 Sept 2025 9:09 AM IST
அக்டோபர் 3-ந் தேதியை விடுமுறையாக அறிவிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை
வரும் 1-ந் தேதி ஆயுத பூஜை. 2- ந் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
- 26 Sept 2025 9:09 AM IST
யாஷிகா ஆனந்தின் அடுத்த படம் ''டாஸ்''
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட குழு திட்டமிட்டுள்ளது.
- 26 Sept 2025 9:08 AM IST
ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி... ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் - 8 பேர் பலி
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
- 26 Sept 2025 9:08 AM IST
''ஓஜி'': நேஹா ஷெட்டியின் சிறப்புப் பாடல் வெளியாகாதது ஏன்?
இந்தப் படத்தில் நடிகை நேஹா ஷெட்டி ஒரு சிறப்புப் பாடலில் நடித்துள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.
- 26 Sept 2025 9:07 AM IST
ஓடிடியில் ''தடக் 2'' - ’’அனிமல்’’ பட நடிகையின் படத்தை எப்போது, எதில் பார்க்கலாம்?
இந்த படம் தமிழ் திரைப்படமான ''பரியேறும் பெருமாள்'' (2018)ன் ரீமேக் ஆகும்.
- 26 Sept 2025 9:06 AM IST
விஜய் மக்கள் சந்திப்பு திட்டத்தில் மாற்றம்.. சென்னையில் பிரசாரம்.. எப்போது தெரியுமா..?
பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நாளில் 2 ஊர்களுக்கு மட்டும் பயணிக்க விஜய் முடிவு செய்து இருக்கிறார்.
- 26 Sept 2025 9:06 AM IST
மலையாள சினிமாவில் வரலாறு படைத்த சாய் அபயங்கர்
ஷான் நிகாம் நடித்துள்ள ''பல்டி'' படத்தின் மூலம் மலையாளத்தில் இசையமைப்பாளராக சாய் அறிமுகமாகி உள்ளார்
- 26 Sept 2025 9:04 AM IST
கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (26.09.2025 வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- 26 Sept 2025 9:03 AM IST
வியாபாரத்தில் செழிப்பு உண்டாகும்... இன்றைய ராசிபலன் - 26.09.2025
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை
நட்சத்திரம்: இன்று இரவு 9.37 வரை விசாகம் பின்பு அனுஷம்
திதி: இன்று காலை 8.15 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 9.15 10.15, № 4.45 5.45
ராகு காலம்: காலை 10.30 12.00
எமகண்டம்: மாலை 3.00 4.30
குளிகை: காலை 7.30 9.00
கௌரி நல்ல நேரம்: காலை 12.15 1.15, ໙ 6.30 7.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: ரேவதி, அஸ்வினி
















