இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Sept 2025 10:02 AM IST
தமிழ்நாட்டில் முதல் முறையாக இயக்கப்படும் ‘அம்ரித் பாரத்’ ரெயில்
பீகார் மாநிலம் ஜோக்பானி வரை செல்லும் 'அம்ரித் பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஈரோட்டில் தொடங்கப்பட்டது.
- 26 Sept 2025 9:53 AM IST
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், டிரம்ப்பின் எச்சரிக்கையை இந்தியா நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். மேலும், இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்து வருகிறார்.
- 26 Sept 2025 9:50 AM IST
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐ.சி.சி.யிடம் பாக்.வாரியம் புகார்.. என்ன நடந்தது..?
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த பிறகு பேட்டி அளித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த வெற்றியை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிக்கிறோம் என்று அறிவித்தார். அவர் விளையாட்டில் அரசியலை கலப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் புகார் அளித்தது.
- 26 Sept 2025 9:49 AM IST
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அப்ரிடியிடம் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
- 26 Sept 2025 9:47 AM IST
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப்
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- 26 Sept 2025 9:46 AM IST
அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்... ஆனால்.. - கருண் நாயர் ஆதங்கம்
இங்கிலாந்து தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் கேப்டனாக நீடிக்கிறார். அந்த அணியில் 8 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து தொடரின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய கருண் நாயர் இடம்பெறவில்லை. அவர் மறுபிரவேசம் செய்த இங்கிலாந்து தொடரில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. அவர் 4 டெஸ்டில் ஆடி ஒரு அரைசதம் உள்பட 205 ரன்களே எடுத்தார். தனது மறுபிரவேச வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாத 33 வயது கருண் நாயருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
- 26 Sept 2025 9:44 AM IST
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
வருகிற 28-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. முன்னதாக இவ்விரு அணிகள் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றில் சந்தித்த ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- 26 Sept 2025 9:42 AM IST
பரபரப்பான சூழலில் இந்தியா ஏ - ஆஸி.ஏ 2-வது டெஸ்ட்
இந்தியா வெற்றி பெற இன்னும் 243 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் ஆஸ்திரேலியா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
- 26 Sept 2025 9:41 AM IST
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று துபாயில் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அணி பட்டியலை வெளியிட்டார்.
- 26 Sept 2025 9:34 AM IST
மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை.. வரலாறு காணாத உயர்வை எட்டிய வெள்ளி விலை
இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனையாகிறது.
















