இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Sept 2025 11:52 AM IST
இந்தியாவுக்கு ஜாக்பாட் - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு
அந்தமான் கடலுக்கு அடியில் இந்தியாவுக்கு கிடைத்த ஜாக்பாட் அடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடலுக்கு அடியில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.
- 27 Sept 2025 11:38 AM IST
பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை - இன்று தொடக்கம்
நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
மக்களுக்கு தடையில்லா சேவை கிடைக்கும் விதமாக 97,500 தொலைத்தொடர்பு கோபுரங்களின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- 27 Sept 2025 11:36 AM IST
புதிய சவாலை ஏற்ற வரலட்சுமி சரத்குமார்...ரசிகர்கள் வாழ்த்து
வரலட்சுமி சரத்குமாரின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
- 27 Sept 2025 11:34 AM IST
அமெரிக்காவில் பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
நியூயார்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், “பலதரப்பு வர்த்தக அமைப்பை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தும்” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
- 27 Sept 2025 11:27 AM IST
வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தி திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது.
- 27 Sept 2025 11:24 AM IST
பீகார் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் அரசின் பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது.
இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் மேற்கொண்டது.
- 27 Sept 2025 11:06 AM IST
“டிரம்ப் தலையிடாவிட்டால் போர் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்” - பாகிஸ்தான் பிரதமர்
டிரம்பின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாக ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
- 27 Sept 2025 11:05 AM IST
தற்போதைய இந்திய அணியில் மாறி இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால்.. -மந்தனா
8 அணிகள் பங்கேற்கும் 13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை வருகிற 30-ந் தேதி கவுகாத்தியில் சந்திக்கிறது.
- 27 Sept 2025 11:04 AM IST
டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த இந்திய அணி
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான இந்தியா வெற்றி பெறுவது இது 23-வது முறையாகும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு எதிரணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற 2-வது அணி என்ற மாபெரும் சாதனையை நியூசிலாந்துடன் (பாகிஸ்தானுக்கு எதிராக) இந்தியா பகிர்ந்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக 24 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.















