இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Sept 2025 9:53 AM IST
மகளிர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல்
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.
- 28 Sept 2025 9:49 AM IST
இந்தியா-பாகிஸ்தான் உறவு இதைவிட மோசமாக இருந்த காலங்களில் கூட.. - சல்மான் ஆஹா பேட்டி
ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்குவதை தவிர்த்து வருகின்றனர்.
- 28 Sept 2025 9:46 AM IST
''பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்திருக்க வேண்டும்''- நடிகர் மீசை ராஜேந்திரன்
கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்திருக்க வேண்டும் என்று நடிகரும் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளருமான மீசை ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
- 28 Sept 2025 9:45 AM IST
தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 28 Sept 2025 9:44 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கை - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தகவல்
ஆணைய அறிக்கைக்கு பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
- 28 Sept 2025 9:43 AM IST
கரூர் துயரம்: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன்
உயிருக்குப் போராடுபவர்களை காப்பாற்ற அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
- 28 Sept 2025 9:41 AM IST
கரூர் சம்பவம்: நடந்தது என்ன? டிஜிபி அலுவலகம் விளக்கம்
கரூரில் என்ன நடந்தது என்பது குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,
*கரூரில் 10,000 பேரை எதிர்பார்ப்பதாக கூறிதான் தவெக அனுமதி பெற்றது.
*இருப்பினும் முந்தைய கூட்டங்களை கருத்தில் கொண்டு சுமார் 500 காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
*மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டிருந்த போதும், மதியம் 12 மணிக்கு விஜய் வருவார் என அக்கட்சியினர் அறிவித்துவிட்டனர்.
*ஆனால், இரவு சுமார் 7.10 மணிக்குத்தான் அவர் வந்தடைந்தார். இதற்கிடையில், காலை சுமார் 11 மணியிலிருந்தே அவரை காண கூட்டம் கூட தொடங்கிவிட்டது.
*தவெக கேட்டிருந்த உழவர் சந்தை மற்றும் லைட்ஹவுஸ் ரவுண்டானா, ஒதுக்கப்பட்ட வேலுச்சாமிபுரத்தைவிட குறுகலானவை.
*விஜய் பேச ஆரம்பித்த போது காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாக நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 28 Sept 2025 9:39 AM IST
கரூரில் இன்று கடைகள் அடைப்பு - வணிகர் சங்கம் அறிவிப்பு
கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தால் கரூர் மாவட்டம் முழுவதும் இன்று துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
- 28 Sept 2025 9:38 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மட்டும் அடையாளம் காணப்படவில்லை - மாவட்ட கலெக்டர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 பேர் பலியானார்கள். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள் ஆவர்.
- 28 Sept 2025 9:37 AM IST
கரூர் சம்பவம்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: மு.க.ஸ்டாலின்
கரூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
















