இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Sept 2025 3:16 PM IST
அக்.3-ம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு பரிசீலனை
அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிக்க தமிழக அரசு பரீலீசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். வாரம் முழுவதும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இந்த தொடர் விடுமுறையானது சற்று இளைப்பாறலை தந்தாலும், அரசு அலுவலர்களின் இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 30 Sept 2025 2:38 PM IST
இத்தாலி பிரதமர் மெலோனியின் சுயசரிதைக்கு முன்னுரை எழுதிய பிரதமர் மோடி
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையான 'I am Giorgia: My Roots My Principles' முன்னுரை எழுதியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மெலோனியின் வாழ்க்கையில் அரசியல், அதிகாரத்தை விட பொது சேவை, இத்தாலியர்கள் மீதான அர்ப்பணிப்பே முதன்மையாக இருந்து வருகிறது. இது வெறும் சுயசரிதை மட்டுமல்ல, அவரது 'மன் கி பாத்' என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
- 30 Sept 2025 2:37 PM IST
விரைவில் மக்களை சந்திப்போம் - ஆதவ் அர்ஜுனா
என் தாயின் இழப்புக்கு பின், இந்த 41 பேரின் உயிரிழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது, இப்போதைக்கு நான் எதுவும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை, விரைவில் மக்களை சந்திப்போம் என தவெகவின் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
- 30 Sept 2025 2:37 PM IST
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுப்போம் - அமெரிக்க அரசு
காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்பின் திட்டங்களை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றப் பிறகு நீடித்த அமைதி நிலைநாட்டப்பட்டால், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் (பணியை அமெரிக்கா முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 30 Sept 2025 1:27 PM IST
25 வயது பெண்களை குறி வைத்து...கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ...சஸ்பென்ஸ் திரில்லரை எதில் பார்க்கலாம்?
மக்கள் தற்போது வெவ்வேறு வகை படங்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திகில் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் படமும் அதே வகையைச் சேர்ந்ததுதான்.
- 30 Sept 2025 1:25 PM IST
பிரபாஸின் ''ஸ்பிரிட்'' படத்தில் இணையும் விஜய் பட நடிகை?
பிரபாஸ், தற்போது 'தி ராஜா சாப்' மற்றும் 'பவுஜி' ஆகிய படங்களில் மும்முரமாக உள்ளார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள 'ஸ்பிரிட்' படமும் அதில் ஒன்று.
- 30 Sept 2025 12:09 PM IST
ஆஷிகா ரங்கநாத்தின் புதிய படம்...டீசர் வெளியானது
கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் புதிய படம் ''கதவைபவா''. துஷ்யந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சுனி இயக்கியுள்ளார். இந்த படம் நவம்பர் 14 -ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் டீசரை வெளியிட்டுள்ளனர்.
- 30 Sept 2025 11:43 AM IST
4 சதவீத இட ஒதுக்கீடு
தமிழக அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு.
மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுவதற்கு ஏற்ற பதவிகள் குறித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
ஏ,பி,சி,டி என்று 4 நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத் திறனாளிகளுக்கு ஏற்ற பதவிகளாக அரசாணை வெளியீடு.
- 30 Sept 2025 11:30 AM IST
சேலம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தை பாலினத்தை ஸ்கேன் செய்து தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்து, திடீரென உள்ளே நுழைந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி, மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- 30 Sept 2025 11:27 AM IST
திருமணத்திற்கு பிறகு சோபிதா நடிக்கும் படம்...ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சோபிதாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளி வந்த வண்ணம் உள்ளன.














