இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Sept 2025 4:59 PM IST
நவராத்திரியின் மற்ற நாட்களை விடுங்க.. இந்த ஒரு நாளாவது பூஜை செய்யுங்க..!
சரஸ்வதி தேவியை வழிபடுவதால் கல்வி, கலைகள், செய்யும் தொழில்கள் வளர்ச்சி அடையும் என்பது நம்பிக்கை.
- 30 Sept 2025 4:56 PM IST
“உங்கள் கட்சித் தலைவரை முதல்-அமைச்சருடன் ஒப்பிட வேண்டாம்..” - தவெக தரப்பிடம் நீதிபதி காட்டம்
கூட்டம் அளவை கடந்தது தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
- 30 Sept 2025 4:54 PM IST
“சி.எம். சார், உங்களுக்கு பழி வாங்க வேண்டும் என்றால்..” - பரபரப்பு வீடியோ வெளியிட்ட விஜய்
தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும், தனது தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
- 30 Sept 2025 4:53 PM IST
விஜய் கரூரில் களத்தில் நிற்காதது ஏன்? - ஆ.ராசா கேள்வி
செய்தி அறிந்த பிறகும் களத்தில் நிற்காமல், அவசரவசரமாக ஏன் சென்னைக்கு வந்தீர்கள்? என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.
- 30 Sept 2025 4:52 PM IST
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைப்பு
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, தனியார் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
- 30 Sept 2025 4:30 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என பரவும் வதந்தி - தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் தகவல்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது தவறான தகவல் பரவி வருகிறது. நெரிசலில் சிக்கிய 11 பேர் அருகே உள்ள அக்ஷயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு 6 ஐ.சி.யூ படுக்கைகளே இருந்துள்ளன. மேலும் அங்கு மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்களும் அங்கு சென்றுள்ளனர். அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
- 30 Sept 2025 3:21 PM IST
“பாதிக்கப்பட்ட குடும்பங்களை எப்போது சந்திக்கிறார் விஜய்..?” - பதிலளித்த ஆதவ் அர்ஜுனா
தன் தாயின் இழப்புக்கு பின், இந்த 41 பேரின் உயிரிழப்பு தன்னை மிகவும் பாதித்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
- 30 Sept 2025 3:20 PM IST
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 30 Sept 2025 3:18 PM IST
தவெக நிர்வாகிகளுக்கு அக்.14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
கரூர் சம்பவத்தில் கைதான தவெக மாவட்ட செயலாளர் மதியழகன். மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் இருவருக்கும் அக். 14-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- 30 Sept 2025 3:17 PM IST
விஜய் பிரசாரத்துக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை - ஹேமமாலினி எம்.பி.
கூட்ட நெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை என பாஜக எம்.பி., ஹேமமாலினி கூறினார்.
















