இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 31 Aug 2025 12:31 PM IST
செப்., 5-ம் தேதி முதல் 2 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்
2ஆம் கட்ட பிரசார பயணத்தை செப்டம்பர் 5ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொள்கிறார்.
இதன்படி திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பிரேமலதா பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 31 Aug 2025 12:22 PM IST
‘இந்தியா-சீனா ஒத்துழைப்பு மனிதகுலத்தின் நலனுக்கு வழி வகுக்கும்’ - பிரதமர் மோடி
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது சீன அதிபர் இவ்வாறு பேசியிருப்பது அமெரிக்காவுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
- 31 Aug 2025 12:20 PM IST
விஜய் சுற்றுப்பயணம்: மாவட்ட செயலாளர்களுக்கு தவெக உத்தரவு
மதுரையில் 2-வது மாநாட்டை நிறைவு செய்துள்ள த.வெ.க. தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- 31 Aug 2025 12:05 PM IST
நடிகர் ரஞ்சித் மீது காவல்துறையில் புகார்
விஜயின் முகத்தில் ஓங்கி குத்த வேண்டும் என தனக்கு தோன்றுவதாகக் கூறிய நடிகர் ரஞ்சித் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
- 31 Aug 2025 11:55 AM IST
''அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்'' - விஷால்
தனது பிறந்தநாளுக்கும் , நிச்சயதார்த்தத்திற்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- 31 Aug 2025 11:48 AM IST
சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் - வானிலை ஆய்வு மையம்
சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு, மேகவெடிப்பால் கனமழை பெய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ. அளவுக்கு அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன்படி மணலி புதுநகரில் 26 செ.மீ., விம்கோ நகரில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 31 Aug 2025 11:33 AM IST
தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
தமிழ்நாட்டில் இன்று(31-08-2025) நள்ளிரவு முதல் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி மதுரை - எலியார்பத்தி சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. அதில் கார், வேன், ஜீப் உள்ளிட்டவற்றுக்கு ரூ.5 கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறைக்கு ரூ.5-ம், இருமுறைக்கு ரூ.10-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
FasTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் 2 மடங்கு வசூலிக்கப்பட உள்ளது. கார், வேன், ஜீப் ஒரே நாளில் பலமுறை செல்வதற்கான கட்டணம், ரூ.95-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டிரக், பஸ் ஒருமுறை செல்ல ரூ.225 இருந்து ரூ.230 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கார், வேன், ஜீப் மாதக் கட்டணம் ரூ.1,930-ல் இருந்து ரூ.1,975 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனம் ஒருமுறை செல்ல ரூ.360-ல் இருந்து ரூ.370 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 31 Aug 2025 11:32 AM IST
இந்த வருடம் வெளிவந்த ஒரு திகில் படம் இப்போது ஓடிடியில் வெளியாகி வருகிறது. இந்தப் படம் சுமார் 133 நிமிடங்கள் உங்களை இமைக்க விடாது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிலிர்க்க வைக்கிறது. நாம் பேசும் படத்தின் பெயர் ''மா''.
- 31 Aug 2025 11:18 AM IST
மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்
மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசனின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இல.கணேசன் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- 31 Aug 2025 11:16 AM IST
ஒரு காலத்தில் சாலையில் பேனா விற்றவர்...இப்போது மாத வருமானம் ரூ.24 லட்சம் - யார் அந்த நடிகர்?
தற்போது திரையுலகில் நட்சத்திரங்களாக வலம் வரும் பல நட்சத்திரங்கள் பல கஷ்டங்களையும் சிரமங்களையும் சந்தித்திருக்கிறார்கள். இந்த பிரபல நடிகரும் இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.
















