செங்கல்பட்டில் ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் - பயணிகள் கடும் அவதி


செங்கல்பட்டில் ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் - பயணிகள் கடும் அவதி
x

ஒட்டிவாக்கம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் சிக்னல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் செங்கல்பட்டு ரெயில்வே நிலையத்திலும் மற்றும் வழியிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டு ரெயில்வே நிலையம் அருகே பரனூர் என்ற இடத்தில் பாண்டிச்சேரி விரைவு ரெயிலும் செங்கல்பட்டில் விழுப்புரம் பேசஞ்சர் ரெயிலும் செங்கோட்டை விரைவு ரெயில்செங்கல்பட்டிலும் சேது ராமேஸ்வரம் விரைவு ரெயில் ஒத்திவாக்கத்திலும் நிறுத்தப்பட்டன.

அதுபோல முத்துநகர் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. ரெயில்கள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டன. ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்கையில் விழுப்புரம் மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் சிக்னல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

1 More update

Next Story