திருச்சி-தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி-தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
Published on

திருச்சி,

திருச்சி-தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ரெயில் சேவை (வண்டி எண் 06190/06191) வருகிற 2-ந் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரெயில்கள் இரு மார்க்கத்திலும் கூடுதலாக 44 முறை இயக்கப்படுகிறது என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், வருகிற நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை கால விடுமுறைகள் வருவதால் பயணிகள் இந்த சிறப்பு ரெயிலை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பாக அமையும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com