கரூரில் டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு


கரூரில் டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
x

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

கரூர்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இன்று நேரில் சந்தித்தனர். கரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்ட நிலையில் அங்கு இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அரசியல் தொடர்பான கருத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story