8-ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி தொடரும் - மாநில கல்விக் கொள்கையில் தகவல்


தினத்தந்தி 8 Aug 2025 1:05 PM IST (Updated: 8 Aug 2025 1:29 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேக்கமின்மைக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வருகிறது.

சென்னை,

மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கற்றலில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களில் கற்றல் இடைவெளியைக் குறைக்கும்

வகையில் குறைதீர் கற்பித்தலை வழங்கி வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டுவரச் சிறப்பு கவனம் அளிக்கப்படும்.

* அனைத்து குழந்தைகளும் தடையின்றி அணுகுதல், குழந்தை மையச் சூழல், சிறப்புத் தேவைகள் உடைய குழந்தைகளுக்குமான பள்ளிக் கட்டமைப்பை தமிழ்நாடு அரசு மேம்படுத்தும்.

* மதிப்பீடுகளை மேற்கொள்ள மாவட்ட மற்றும் பள்ளி அளவில் ஆண்டுதோறும் சமச்சீரான தணிக்கை முறை கட்டாயப்படுத்தப்படும்.

* 1 முதல் 3-ம் வகுப்புகளில் பயிலும் ஒவ்வொரு குழந்தையும் வயதிற்கேற்ற படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவுத் திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம்சார் திட்டத்தினை மாநில அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.

* தமிழ்நாடு அரசு 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேக்கமின்மைக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. இக்கொள்கை, தேர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆண்டு இறுதித் தேர்வுகளில் இருந்து விலகி தொடர்ச்சியான, மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைந்த, திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளை வலியுறுத்துகிறது.

* தனிப்பட்ட உதவி மூலம் மாணவர்களது திறன் அடைவை உறுதி செய்து, 8-ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சியினை உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர்களின் முன்னேற்ற அறிக்கைகள், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் மற்றும் இணைய செயலிகள் வாயிலாக மாணவர்களது முன்னேற்றம் மற்றும் இடைவினைத் திட்டங்களை தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்.

* அனைத்து ஆசிரியர்களுக்கான ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல் மற்றும் கற்பித்தல் திறன்களை வளப்படுத்துவதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட தொடர் ஆசிரியர் திறன்மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

* நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி முன்னெடுப்பின் மூலம் இதுவரை ரூ.755 கோடி நிதி திரட்டப்பட்டு 7 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளில், திறன் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பயன்கள் பெறப்பட்டுள்ளன.

* சமூகக் காவல் மற்றும் விற்பனையாளர்களைக் கொண்டு பள்ளிக்கு அருகில் போதைப்பொருள்கள் நடமாட்டத்தைத் தடுப்பதில் பள்ளி மேலாண்மைக் குழு, உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் மற்றும் சமூக உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story