ஜி.எஸ்.டி. குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட மத்திய நிதி மந்திரி

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று கோவை வந்தார்.
கோவை,
மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஜி.எஸ்.டி வரி சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பல்வேறு பொருட்கள் விலை குறைந்து உள்ளது. இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கோவை வந்தார்.
கோவை சோமனூர், குரும்பபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வரி குறைப்பு குறித்து கலந்துரையாடினார். கடைகளுக்கும் சென்று பொருட்களை வாங்கும் பொதுமக்களை சந்தித்தார். குறிப்பாக இல்லத்தரசிகளிடம் வரி குறைப்பு காரணமாக பலன் கிடைத்து உள்ளதா ? என கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார்.
இதை தொடர்ந்து வணிகர்களிடம் செலுத்திய வரியை மீண்டும் பெறும் திட்டம் (இன்புட் டேக்ஸ் கிரெடிட்) தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தியதுடன் வரி குறைப்பு மக்களுக்கு சென்று அடைவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.






