வேலூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
வேலூர்,
வேலூர் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசுப்பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்றபோது அக்கடையின் உரிமையாளரான ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த அப்துர் ரசாக் (வயது 83) என்பவர் கையை பிடித்து இழுத்து முத்தம் தரும்படி கூறி உள்ளார்.
மேலும் சக மாணவிகளுடன் கடைக்கு செல்லும்போதும் கடைசியாக மாணவிக்கு தின்பண்டங்கள் வழங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் நேற்று முன்தினம் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்துர் ரசாக் மீது போக்சோ சட்டத்தில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.






