மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய்; செங்கோட்டையன் புகழாரம்


மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய்; செங்கோட்டையன் புகழாரம்
x

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

திருப்பூர்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது, ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி என்றால் 4 படங்களுக்கு ரூ. 1000 கோடி கிடைக்கும். ஆனால் அந்த பணம் தேவையில்லை என்று மக்களுக்காக சேவையாற்ற அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய். தமிழ்நாடு மட்டுமல்ல... கேரளா.. ஆந்திரா...கர்நாடகாவில் கூட இவரைப்போல ஒருவர் இல்லையே என அங்குள்ளவர்களுக்கு ஏக்கம் இருக்கிறது. 234 தொகுதியில் தவெக வெற்றி பெறும்‌. மே மாதத்திற்கு பிறகு தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருக்கும். விஜய் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரை நாம் ஓயப்போவதில்லை. பொங்கலுக்கு பிறகு மாற்றம் தமிழகத்தில் உண்டாகும்.

என்றார்.

1 More update

Next Story