விஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - கார்த்தி சிதம்பரம்

photo Credit: PTI
விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடி,
சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "விஜய் தனது கொள்ளையை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல வேண்டும். மேலும் அவரது மாநாட்டில் உத்வேகம் இருந்தது. அது அமைப்பாக மாறி, தேர்தலை சந்திக்கும் அளவுக்கு செல்லுமா? என்பதை காலம் தான் சொல்லும். சாதுரியமாக அல்லது பிம்பத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பார்களா என்பதை பார்க்க வேண்டும். அரசியல் கட்சியின் செயல்பாடு, நடத்தை, கொள்கை போக, போக தான் தெரியும். சீமான் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் கிடையாது. இதனால் அவருக்கு யதார்த்தமான அச்சம் வந்துள்ளது" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story






