விழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் நகை அபேஸ்


விழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 22 Nov 2025 9:51 PM IST (Updated: 22 Nov 2025 9:55 PM IST)
t-max-icont-min-icon

திருடப்பட்ட தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

விழுப்புரம்,

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலன்(வயது 44). இவர் சம்பவத்தன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக அவரது தாய் நாகா, தந்தை ராமலிங்கம் ஆகியோருடன் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து அரசு பஸ்சில் ஏறி முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அப்போது நாகா தனது கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் தனது கணவர், மகன் ஆகியோருடன் அக்கம் பக்கத்தில் தேடியபோது சங்கிலியை காணவில்லை. விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து பஸ்சில் ஏறி வரும்போது யாரோ மர்ம நபர் நாகாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அபேஸ் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அபேஸ் செய்யப்பட தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பாலன் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story