வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அலுவலர் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி


வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அலுவலர் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி
x

சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பகவதிராஜா சேர்க்கப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்தவர் பகவதிராஜா. இவர் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் திடீரென கத்தியால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அங்கிருந்த சக ஊழியர்கள் பகவதிராஜாவை மீட்டு சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே கவனித்து வந்த பணிகளுடன் கூடுதலாக வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளையும் மேற்கொண்டேன். பணிச்சுமை அதிகமானதால் தற்கொலைக்கு முயன்றேன் என பகவதிராஜா கூறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 15 நாட்களுக்கு முன்புதான் இந்த பணிக்கு பகவதிராஜா மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சி அளிக்கிறது. பணிச்சுமை காரணமாகத்தான் அவர் கையை அறுத்துக்கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story