வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம்: சென்னையில் 16,35,596 பேருக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டுள்ளது


வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம்: சென்னையில் 16,35,596 பேருக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டுள்ளது
x

கணக்கீட்டுப் படிவங்கள் தொடர்பான சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அறிவிப்பு 27.10.2025 முதல் அறிவிக்கப்பட்டு, அதன் செயலாக்கத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் கணக்கீட்டுப் படிவத்தினை (Enumeration Form) வீடுவீடாகச் சென்று வழங்குவது தொடர்பாக பயிற்சிகள் 28.10.2025 முதல் 03.11.2025 வரை வழங்கப்பட்டது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு 04.11.2025 அன்று முற்பகல் பயிற்சி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 40,04,694 வாக்காளர்களுக்கு 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுவீடாக சென்று கணக்கீட்டுப் படிவம் (Enumeration Form) 04.11.2025 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

04.11.2025 முதல் 10.11.2025 வரை இரவு 8 மணி 04.11.2025 முதல் 10.11.2025 வரை கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்ட விவரம்

மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 04.12.2025க்குள் கணக்கீட்டுப் படிவம் வழங்கி வாக்காளரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஏற்கனவே வாக்காளரிடம் வழங்கப்பட்ட 2 படிவங்களில் ஒன்றை பெற்றுக் கொண்டு, அதற்கு ஆதாரமாக மற்றொரு கணக்கீட்டுப் படிவத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒப்புகை கையொப்பமிட்டு அதனை அந்த வாக்காளரிடம் வழங்குவார்.

வாக்காளர்கள் கணக்கீட்டுப் படிவங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 1950 என்ற தேர்தல் உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story