தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ப்ரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. ஆகவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






