கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம்.. மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான் -தவெக தரப்பு வாதம்


கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம்.. மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான் -தவெக தரப்பு வாதம்
x
தினத்தந்தி 30 Sept 2025 1:26 PM IST (Updated: 30 Sept 2025 2:39 PM IST)
t-max-icont-min-icon

கூட்டம் அளவு கடந்து சென்றது தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்

கரூர்,

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் தவெக மதியழகன், பவுன்ராஜ் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கோர்ட்டில் வைக்கப்பட்ட வாதத்தில் கூறப்பட்டதாவது:

“அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். நாங்கள் முறையாக விதிகளை பின்பற்றினோம். கூட்டத்தில் சட்டவிரோதிகள் நுழைந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வர வேண்டிய அவசியம் இல்லை.கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம்; மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான்” என்று வாதிட்டனர்.

அப்போது, நீதிபதி, “கூட்டம் அளவை கடந்தது தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

போலீஸ் தரப்பு வைத்த வாதத்தில், “கூட்டம் அளவு கடந்து சென்றதும் விஜய் வாகனத்தை முன்பே நிறுத்தி பேச சொல்லியிருந்தோம். ஆனால் இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story