யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் அறிவிப்போம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று எழுதி கொடுத்தது அதிமுகதான் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை,
ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் தொடரும் தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. தேமுதிகவிற்கு சீட் வழங்கப்படாதது அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதாவது: -
5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் தருகிறோம் என அதிமுக உறுதியளித்து இருந்தது. தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று எழுதி கொடுத்தது அதிமுகதான். விஜயகாந்த் மறைவுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றட்டதற்கு திமுகவிற்கு நன்றி. யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில்தான் அறிவிப்போம்" என்று கூறினார்.
அதிமுகவுடன் கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது என்று கே.பி.முனுசாமி கூறிய நிலையில், பிரேமலதா விஜயகாந்த இதனை மறுக்கும் விதமாக பதிலளித்து இருக்கிறார். கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது என்று அதிமுக கூறியுள்ளதே என்று கேட்ட போது அதற்கு, அவர்களிடம் (அதிமுக) தான் கேட்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.






