திமுக கூட்டணியில்தான் இருப்போம்: திருமாவளவன் திட்டவட்டம்

திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என திருமாவளவன் கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. முருக பக்தர்களை பாஜக ஆதரவாளர்களாக மாற்ற முயற்சிக்கிறது. கூட்டணி நலனையும் வெற்றியையும் கருத்தில் கொண்டு திமுகவிடம் தொகுதிகள் கேட்போம். கூடுதல் தொகுதிகள் கோரிக்கை நிறைவேறாவிட்டாலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்.
தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறையை தூண்ட முடியாது. ஆதாயம் தேட முடியாது ஒடிசா, மஹாராஷ்டிரா, டெல்லி போல தமிழ்நாட்டை ஒருபோதும் எண்ணிவிட வேண்டாம். தமிழ்நாடு பண்படுத்தப்பட்ட மண். முருக பக்தர்களாக இருந்தாலும் மதச்சார்பற்றவர்களாக இருப்பர்" என்றார்.
Related Tags :
Next Story






