சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி

நாளையும் விசாரணைக்கு வருமாறு சிபிஐ அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். நாளையும் ஆஜராகி விளக்கம் கொடுப்போம் என்று கூறினார்.
புதுடெல்லி,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், மதியழகன் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது. சிபிஐ விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கூறியதாவது: -
நான்கு பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகியிருந்தோம். சிபிஐக்கு தேவையான விளக்கங்கள் கொடுத்தோம். கரூர் சம்பவத்திற்கு யார் காரணம், என்ன நடந்தது என்பது உலகத்திற்கே தெரியும். சிபிஐக்கு ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சிபிஐக்கு தேவையான விளக்கங்கள் கொடுத்தோம். நாளையும் விசாரணைக்கு வர சொல்லி இருக்கிறார்கள். நாளையும் ஆஜராகி விளக்கம் கொடுப்போம்.
சிபிஐ கேட்ட கேள்விகளை பொதுவெளியில் ஊடகங்கள் முன் சொல்வது நன்றாக இருக்காது. என்னென்ன விஷயத்தில் விளக்கம் கேட்கப்பட்டதோ அனைத்தையும் கொடுத்தோம். திமுக ஆதரவாளர்கள் இதை வேறு விதமாக திசை திருப்ப பார்க்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. எந்த சமரசமும் இன்றி செயல்படுவோம். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.






