கரூர் வழக்கை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி யார்? பின்னணி


கரூர் வழக்கை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி யார்? பின்னணி
x

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958-ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்தார்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சி.பி.ஐ. விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்தார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982-ம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

1990-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004-ம் ஆண்டு வரை அந்தப் பதவியில் நீடித்தார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி முதல் 2016-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார்.

2018-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அஜய் ரஸ்தோகி 2018-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். 2023 ஜூன் 17-ந்தேதி வரை அவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை அவர் வழங்கியுள்ளார்.

1 More update

Next Story