நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம் - அமித்ஷாவுக்கு கனிமொழி பதில்


நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம் - அமித்ஷாவுக்கு கனிமொழி பதில்
x

கோப்புப்படம் 

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

சென்னை

மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க முயற்சி எடுக்க வேண்டும். நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உதவும்.

இந்தி எந்த இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை. மாறாக, அது அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஆனால் ஒருவரின் சொந்த மொழியைப் போற்றுவதற்கான உந்துதல் இருக்க வேண்டும். ஒருவரின் சொந்த மொழியைப் பேசுவதற்கான உந்துதல் இருக்க வேண்டும், ஒருவரின் சொந்த மொழியில் சிந்திக்கும் உந்துதல் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலளித்துள்ள கனிமொழி எம்.பி. "அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்" என்று கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story