உல்லாசம் அனுபவித்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

உல்லாசம் அனுபவித்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள கக்கனூரை சேர்ந்தவர் சுதாகர் மகன் விக்னேஷ் (வயது 19). ஐ.டி.ஐ. படித்துவிட்டு டிரைவாக உள்ளார். இவர் செஞ்சி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15.3.2025 அன்று விக்னேஷ் அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவரிடம் விக்னேஷ் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக தொிகிறது. இதில் அவர் கர்ப்பமானார்.
இதனால் அந்த இளம்பெண் விக்னேசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் விக்னேஷ் அதற்கு மறுத்துவிட்டார். இதுகுறித்து இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






