ஓடும் பஸ்சில் கர்ப்பிணியிடம் 18 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது


ஓடும் பஸ்சில் கர்ப்பிணியிடம் 18 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது
x

நகை பறித்ததாக திருச்சி சாலக்குடி பகுதியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சரவணன். இவரது மனைவி பிரியா (வயது 30). தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ள பிரியா, கடந்த மாதம் 30-ந்தேதி தனது ஒரு வயது குழந்தையுடன் பஸ்சில் வேலூருக்கு சென்றார். படப்பை அருகே சென்றபோது பஸ்சில் இருந்த மர்மநபர், பிரியாவின் கவனத்தை திசை திருப்பி அவரது பையில் இருந்த 18 பவுன் நகையை திருடிச்சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்தநிலையில் கர்ப்பிணியிடம் நகை பறித்ததாக திருச்சி சாலக்குடி பகுதியை சேர்ந்த காசிநாதன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகைகளை விற்று வைத்திருந்த ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story