கடன் தொல்லையால் விபரீதம்: நண்பருடன் செல்போனில் பேசியபடியே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ செலவுக்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் வாலிபர் கடன் வாங்கி உள்ளார்.
கடன் தொல்லையால் விபரீதம்: நண்பருடன் செல்போனில் பேசியபடியே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
Published on

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் கோகுல் பிரசாத் (31 வயது). இவரது தந்தை போட்டோ மணி, கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்து போனார். முன்னதாக தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ செலவுக்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் கோகுல் பிரசாத் கடன் வாங்கி உள்ளார்.

தற்போது தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மேற்கொண்டு கடன் அதிகமாக வாங்கியதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கோகுல் பிரசாத், தனது நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டே எர்ணாவூர் கேட் அருகே சென்றார். பின்னர் தனது நண்பரிடம், ரெயில் வருகிறது. நான் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என நண்பருடன் பேசிக்கொண்டே ரெயில் முன் பாய்ந்தார்.

இதில் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கோகுல் பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com