தலைமுடி உதிர்ந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


தலைமுடி உதிர்ந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

கன்னியாகுமரியில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலைமுடி அதிக அளவு உதிர்ந்து வந்ததாகவும், இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 64). இவரது இளைய மகள் ஐஸ்வர்யா (27). இவர் பி.எஸ்சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலைமுடி அதிக அளவு உதிர்ந்து வந்ததாகவும், இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யா தனது பெற்றோரிடம் நான் உயிரோடு இருப்பதைவிட சாவதே மேல் என்று அடிக்கடி கூறி புலம்பியுள்ளார்.

இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யாவின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்தபோது ஐஸ்வர்யாவின் படுக்கை அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. அவர்கள் கதவை வெகு நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. இதைதொடர்ந்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் ஐஸ்வா்யா தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே மகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

1 More update

Next Story