இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது


இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2025 8:55 AM IST (Updated: 14 Feb 2025 11:33 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வீடுகளுக்கு சென்று வேலை பார்த்து வந்தார். அவர் தினமும் வேலைக்கு செல்லும் போது, அவரை பின்தொடர்ந்து சென்று, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அவரது பாலியல் இச்சை அழைப்புக்கு அந்த இளம்பெண், ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இருந்தாலும் அந்த வாலிபர் தினமும் இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்றார். ஒரு கட்டத்தில் கையை பிடித்து இழுத்து, அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதனால் அந்த இளம்பெண், கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், பெண்கள் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக போபண்ணா ராஜேஷ் (வயது 35) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரும் அதே பகுதியை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story