ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாகும் வாய்ப்பு

தமிழகத்திற்கு வரும் 22-23 தேதிகளில் 'ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். மேலும், அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால், ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக உள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் -22 மற்றும் -23 ஆகிய தேதிகளில் குறைந்தபட்சம் 12 செ.மீ முதல் அதிகபட்சம் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






