தமிழகம் முழுவதும் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?


தமிழகம் முழுவதும் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 Jan 2025 6:08 AM IST (Updated: 19 Jan 2025 7:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (19-01-2025) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி

சென்னை,

திருவள்ளூர்,

செங்கல்பட்டு,

காஞ்சிபுரம்,

வேலூர்,

ராணிப்பேட்டை,

திருப்பத்தூர்,

கடலூர்,

விழுப்புரம்,

மயிலாடுதுறை,

நாகப்பட்டினம்,

திருவாரூர்,

தஞ்சாவூர்,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம்,

தூத்துக்குடி,

திருநெல்வேலி,

கன்னியாகுமரி,

தென்காசி மாவட்டங்களில் ஒன்றிரண்டு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் கனமழை

கிண்டி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் திடீர் கனமழை பெய்தது. மேலும் சென்னை சென்டிரல், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்றிரவு சென்னை புறநகரில் சாரல் மழை பெய்தது.


Next Story