அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு


அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
x

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் உள்ள கவ்டலெப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கனமழை, வெள்ளப்பெருக்கின்போது ஆற்றின் அருகே கோடை விடுமுறை முகாமில் பங்கேற்றிருந்த 7 முதல் 17 வயதிற்கு உள்பட்ட சிறுமிகள் 25 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில், டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 சிறுமிகளும் அடக்கம். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய சிறுமிகளை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story