ஆப்கானிஸ்தான்: 3 நாட்களில் 3-வது முறையாக நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் கடந்த நவம்பர் 4-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 27 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தான்: 3 நாட்களில் 3-வது முறையாக நிலநடுக்கம்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது

கடந்த 3 நாட்களில் 3-வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் இதுவாகும். கடந்த 3-ந்தேதி இரவு 11 மணியளவில் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி இருந்தது. அது 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதேபோன்று, அதே நாளில் அதே பகுதியில் மாலை 6.33 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 4.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

கடந்த நவம்பர் 4-ந்தேதி ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 6.3 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக அதில் சிக்கி 27 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com