இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: 17 பேர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா.
ஜகர்தா,
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் பலர் மாயமாகியுள்ளன நிலையில் தேடுதல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






