அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி அரங்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது


அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி அரங்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
x

இசை நிகழ்ச்சி அரங்கத்துக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் இண்டியோ நகரில் தனியார் கிளப் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த அரங்கத்துக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என கண்டறியப்பட்டது. அதேசமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சாண்டா மோனிகா பகுதியைச் சேர்ந்த டேவிஸ் டார்விஷ் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

1 More update

Next Story