வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம்


வாட்ஸ் அப்-க்கு போட்டியாக  எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம்
x

representation image (Grok AI)

ஆடியோ, வீடியோ கால் வசதிகளுடன் இந்த சாட்டிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டுவிட்டரை எலான் மஸ்க் கடந்த 2022-ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அந்த செயலியில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். புளூ டிக் வசதியைப் பணம் கொடுத்து யார் வேண்டுமானாலும் பெறலாம் என்று தொடக்கத்திலேயே மாற்றம் கொண்டு வந்தார். அதுபோக, பயனர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்கள் அறிமுகமாகி வருகின்றன. எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ள குரோக் ஏஐ (AI) தற்போது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், வாட்ஸ்-அப்பிற்கு போட்டி கொடுக்கும் வகையில் சாட்டிங் வசதியும் எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ளது. ஆடியோ, வீடியோ கால் வசதிகளுடன் இந்த சாட்டிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த புதிய சாட்டிங் வசதி அறிமுகமாகியுள்ளது. தற்போது ஆப்பிள் ஐஓஎஸ் (iOS) சாதனங்களில் மட்டும் இந்த வசதி கிடைக்கிறது. விரைவில் ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story