காசா நகரம் முற்றிலும் அழிக்கப்படும்; இஸ்ரேல் ராணுவ மந்திரி எச்சரிக்கை


காசா நகரம் முற்றிலும் அழிக்கப்படும்; இஸ்ரேல் ராணுவ மந்திரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2025 2:00 AM IST (Updated: 23 Aug 2025 2:01 AM IST)
t-max-icont-min-icon

22 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரில் இதுவரை சுமார் 63 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

ஜெருசலேம்,

இஸ்ரேல்-காசா இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நிலவியது. இதனால் 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 22 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரில் இதுவரை சுமார் 63 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. இதனையடுத்து மீதமுள்ள பணய கைதிகளை ஒப்படைத்தல், ஆயுத குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை நிறைவேற்றும் வரை காசா மீது தாக்குதல் தொடரும் எனவும் இதற்காக ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு கூறினார். இந்தநிலையில் இஸ்ரேலின் நிபந்தனையை ஏற்கவில்லை எனில் காசா நகரம் முற்றிலும் அழிக்கப்படும் என ராணுவ மந்திரி காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story