அமெரிக்காவில் கனமழை; மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் புகுந்த வெள்ளம்


அமெரிக்காவில் கனமழை; மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் புகுந்த வெள்ளம்
x

அமெரிக்காவில் கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் பல நெடுஞ்சாலைகள் மற்று, சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் அங்கு அவசர சிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ள நீர் புகுந்தத்தால், பயணிகள் இருக்கையில் ஏறி நின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story