கனமழை: திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் பலி


கனமழை: திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் பலி
x

மஞ்சள் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 10-க்கும் மேற்பட்டோர் அடித்துச்செல்லப்பட்டனர்.

பீஜிங்,

சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த கனமழையால் ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி மஞ்சள் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 10-க்கும் மேற்பட்டோர் அடித்துச்செல்லப்பட்டனர்.

அதேபோல் ஓர்டோசில் உள்ள ஆற்றிலும் 3 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. மீட்பு பணியில் அவர்கள் 13 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் வெள்ளத்தில் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story