காசா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்


காசா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
x

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஐ.நா.சபை எச்சரித்துள்ளது.

ஜெருசலம்,

காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹமாசை தோற்கடிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களைத் திரும்பப் பெறவோ முடியாது என்று அமைச்சரவை மந்திரிகள் பெரும்பாலானோர் நம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது.

இந்தநிலையில், காசா நகரத்தை ஆக்கிரமிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 5 கொள்கைகள் ஆகியவற்றை விபரிக்கும் ஒரு அறிக்கையை நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில்

* ஹமாஸ் அமைப்பை நிராயுதமாக்குவது.

* அனைத்து பணயக்கைதிகளையும் - உயிருடன் இருப்பவர்களையும் மற்றும் இறந்தவர்களையும் உடல்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புதல்.

* காசா பகுதியை இராணுவ மயமாக்குதல்.

* காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடு.

* ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகார சபை அல்லாத ஒரு மாற்று சிவில் அரசாங்கத்தை நிறுவுதல் என்பன இந்த அம்சத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அத்துடன் பணயக்கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story