வங்காளதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவை ரத்து


வங்காளதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவை ரத்து
x

வங்காளதேச தலைநகர் டாக்காவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், டாக்கா விமான நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்தால் விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. டாக்கா விமான நிலையம் வரவிருந்த விமானங்கள் மாற்று நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், டாக்காவில் இருந்து புறப்படவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். அதேவேளை, தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

1 More update

Next Story