ரஷிய அணு மின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 277வது நாளாக நீடித்து வருகிறது.
மாஸ்கோ,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 277வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், ரஷியாவின் குருஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் 34வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரஷிய அணு மின் நிலையம் மீதான தாக்குதல் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story






