நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல: டிரம்ப் விரக்தி


நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல: டிரம்ப் விரக்தி
x

நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியிருப்பதாகவும், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவ்வப்போது பேட்டிகளில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த டிரம்ப், தற்போது நோபல் பரிசு எல்லாம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று பேசியுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இதுதொடர்பாக கூறியதாவது:

“நேட்டோ நாடுகளைக் காப்பாற்றியது நான்தான். என்னுடைய தனிப்பட்ட முயற்சியால் நேட்டோ நாடுகளுக்கான நிதிப் பங்களிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும். நான் தனியாகவே 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல. நியாயமற்ற முறையில் தனக்கு நோபல் பரிசை நார்வே மறுத்துள்ளது. நார்வே முட்டாள்தனமான முடிவை எடுத்துள்ளது. சீனாவும் ரஷ்யாவும் பயப்படும் ஒரே நாடு அமெரிக்காதான். மோதல்களைத் தடுத்து அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட காரணமாக இருக்கும் நாடும் அமெரிக்காவே” என்றார்.

1 More update

Next Story